News November 6, 2025
சற்றுமுன்: விஜய்க்கு அஜித் மீண்டும் ஆதரவு

கரூர் விவகாரத்தில் <<18163956>>விஜய்க்கு ஆதரவாக அஜித்<<>> பேசியதாக தவெகவினர் SM-ல் பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில், கூட்டம் கூட்டுவதை அஜித் விமர்சித்ததை, விஜய்க்கு எதிராக பேசியதாக மற்றொரு தரப்பு கூறியது. இந்நிலையில், தனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என அஜித் தெரிவித்துள்ளார். விஜய்க்கு நல்லதையே தான் நினைத்திருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 31, 2026
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்

OPS பக்கம் இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர், பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம், பரமக்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.
News January 31, 2026
இரவில் தூக்கம் வராது.. இதெல்லாம் சாப்பிடாதீங்க

சில உணவுகளை இரவில் சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சாக்லேட், காபி போன்றவற்றில் காஃபின் இருப்பதால், அவற்றை உண்டால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். மேலும், காரமான உணவுகள், சீஸ் கலந்த உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை இரவில் சாப்பிட்டால், அவற்றில் இருக்கும் நீர்ச்சத்து அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டி, தூக்கத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்.
News January 31, 2026
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் உறைபனி தொடங்கியுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை அதிகாலை பனிமூட்டம் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. நாளை விடுமுறை நாள் என்பதால் முடிந்தளவு காலையில் வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!


