News November 23, 2025

காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

image

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!

Similar News

News November 23, 2025

BREAKING: விஜய் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்

image

காஞ்சி நிகழ்ச்சியில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போகும் சில அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, *தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு *ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும் என்பது லட்சியம் *வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம் *ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளார்.

News November 23, 2025

திமுக மீது வன்மம் இல்லை: விஜய்

image

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் எம்ஜிஆர் பாடலுடன் விஜய் தனது பேச்சை தொடங்கினார். அப்போது, திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை. ஆனால், திமுகவினருக்கு வேண்டுமானால் தவெக மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம் என்று சாடினார். மேலும், கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்கும் திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான் என்று விமர்சித்தார்.

News November 23, 2025

அனைத்து சாதியினரையும் நீதிபதியாக்கிய கவாய்!

image

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, பல மாநில ஐகோர்ட்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 129 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 93 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் SC பிரிவினர், 11 OBC, 13 சிறுபான்மையினர் மற்றும் 15 பெண் நீதிபதிகள் அடங்குவர்.

error: Content is protected !!