News January 13, 2026
காங்கிரஸ் தான் தமிழர்களை அவமதித்தது: பாஜக

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஜன நாயகன் குறித்த ராகுல் காந்தியின் கருத்து உள்நோக்கம் கொண்டது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் CR கேசவன் கூறியுள்ளார். மேலும் அன்றைய காங்கிரஸ் அரசு தான், ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று இழிவாகக் கூறி, தமிழர்களின் உணர்வை அவமதித்தது என்றும், தற்போது திமுக-காங்., கூட்டணி பிளவுபட்டு வருவதை திசைதிருப்பவே ராகுல் அப்பட்டமாக பொய் சொல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
இஸ்லாமியர்களை புறந்தள்ளும் திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கி வரும் முஸ்லீம் கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படவில்லை என தமிழ் மாநில காங்., கட்சியின் பொதுச் செயலாளர் முனாவர் பாஷா குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, பிரதான இஸ்லாமிய கட்சிகள் ஒரு சீட்டுக்கும், இரண்டு சீட்டுக்கும் திராவிட கட்சிகளிடம் நிற்காமல், ஒரு குடையின் கீழ் இணைந்தால் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்.
News February 13, 2026
உப்பு குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்!

குழந்தைகளின் உணவில் கூடுதலாக உப்பு சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து சோடியத்தையும் கொண்டுள்ளது. அதனால் உப்பு சேர்க்க தேவையில்லை. ஒரு வயத்துக்குட்பட்ட குழந்தைகளின் சிறுநீரகங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், உப்பை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், 5 வயது வரை உப்பு கட்டாயம் இல்லை.
News February 13, 2026
வரலாற்று சாதனை படைத்த இந்தியா

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா புதிய சாதனை படைத்தது. T20 WC-ல் ரன் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். அதேபோல், T20 WC-ல், தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று, மற்றொரு வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது. முன்னதாக, 2012-ல் இங்கி.,க்கு எதிராக 90 ரன்கள், 2014-ல் ஆஸி.,க்கு எதிராக 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.


