News November 14, 2025

கவின் கொலை வழக்கு: சுர்ஜித் தாய்க்கு பிடிவாரண்ட்

image

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய மாவட்ட கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கிருஷ்ணகுமாரி, கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

Similar News

News November 15, 2025

தேர்தலில் படுதோல்வி: வைரலாகும் PK மீம்ஸ்

image

தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரின் (PK) ஜன்சுராஜ் கட்சி, தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இதையடுத்து ‘ஜீரோ வென்ற PK’ என மீம்களை பறக்க விடுகின்றனர் வடமாநில நெட்டிசன்ஸ். ஒரு மீமில் பெட்ரோல் பம்ப்பை கையில் பிடித்துள்ள PK, ‘செக் பண்ணுங்க ஜீரோ, ஜீரோ’ என்பது போலவுள்ளது. இன்னொன்றில், பிளேடு எடுத்துக் கொடுக்கும் லாலு, ‘இந்தா நரம்பை கட் பண்ணிக்கோ..’ என்று சொல்வது போலவுள்ளது.

News November 14, 2025

பிஹார் தேர்தல்: வாக்கு சதவீதத்தில் RJD முதலிடம்

image

பிஹார் தேர்தலில், தேஜஸ்வி யாதவின் RJD வாக்கு சதவீதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. EC வெளியிட்டுள்ள முடிவுகளின்படி 143 தொகுதிகளில் போட்டியிட்ட RJD-ன் வாக்கு சதவீதம் 22.99 ஆகும். 82 இடங்களில் வெற்றி கண்டுள்ள BJP 20.07% வாக்குகளை பெற்றுள்ளது. நிதிஷின் JD(U) 19.27%, காங்கிரஸ் 8.73%, ஒவைசியின் AIMIM 1.85% பெற்றுள்ளன. 238 தொகுதிகளில் களம் கண்ட ஜன் சுராஜிற்கு 3.3% வாக்குகள் கிடைத்துள்ளன.

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது: ராகுல்

image

பிஹார் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். MGB கூட்டணிக்கு வாக்களித்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி என X-ல் அவர் பதிவிட்டுள்ளார். தொடக்கத்தில் இருந்தே நியாயமாக நடக்காத இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றும், தோல்விக்கான காரணம் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு கடுமையாக முயற்சிப்போம் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!