News January 14, 2026

கள்ளக்குறிச்சி: மாமியாரால் தூக்கில் தொங்கிய மருமகள்!

image

கள்ளக்குறிச்சி: தச்சூரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி சரண்யா (32). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வசந்தகுமார் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என மருமகள் சரண்யாவை மாமியார் தேவி நேற்று முன்தினம் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

கள்ளக்குறிச்சி கிராமத்திற்கு விருது!

image

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, அரசின் திட்டப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்த சிறந்த கிராமமாக ரங்கப்பனூர் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.இதனைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமாராஜ், ரிஷிவந்திடம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக், கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மிதந்த ஆண் சடலம்!

image

கச்சிராயப்பாளையம் அடுத்த அக்கராயப்பாளையம் – பொட்டியம் சாலையில் குறுக்கே உள்ள கோமுகி ஆற்றில் நேற்று(பிப்.1) 80 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்து உடனே விரைந்த கச்சிராயப்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் குளத்து மேட்டு பகுதியைச் சேர்ந்த செங்கான்(80 என்பதும் , கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றது தெரிய வந்தது.

error: Content is protected !!