News April 13, 2024
ஓட்டுப்பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை

புதுவை மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஓட்டுப்பதிவு நாளன்று அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.
Similar News
News July 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி MLA ராஜினாமா!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்று வந்தது. அவ்வகையில் புதுடெல்லியில் கடந்த (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை MLA நேரு புதுவைக்கு தனது பதவியை இன்று (ஜூலை 9) ராஜினாமா செய்தார். மேலும் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் அவர் வழங்கினார்.
News July 9, 2025
புதுவை: ஆசிரியர் பட்டய படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
News July 9, 2025
“இந்தியாவின் மொழி வளம் தனித்துவமானது” – ஆளுநர்

பாஷினி ஆப்’ அறிமுகம் மற்றும் துவக்கி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், “தொலைநோக்குப் பார்வை கொண்ட நம்முடைய பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழி வளம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தனித்துவமானது. மொழி அடிப்படையிலான இடைவெளியை இந்த ஆப் குறைக்கிறது.” என்று தெரிவித்தார்