News November 7, 2025
எறும்புக்கு பயந்து பெண் தற்கொலை!

சில விஷயங்கள் மீதான அதீத பயத்திற்கு ஃபோபியா என்று பெயர். அப்படி ஒரு ஃபோபியா, உயிர் ஒன்றை பறித்த சம்பவம் தெலங்கானா, சங்காரெட்டியில் நடந்துள்ளது. Myrmecophobia என்ற எறும்புகள் மீதான தீவிர பயத்தால், கணவனையும், 3 வயது மகளையும் விட்டுவிட்டு, பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘இனிமேல் எறும்புகளுடன் வாழ முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 7, 2025
தமிழக அரசின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அக்.31-ம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81% ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
ராஜினாமா பண்ணலாம்னு இருந்தேன்: சத்யபாமா

ஒருங்கிணைப்பு பற்றி பேசியதால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக Ex MP சத்யபாமா தெரிவித்துள்ளார். தானே ராஜினாமா கடிதம் கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் EPS கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லது சொன்னால் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாகவும், EPS-ன் இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து யாரும் கருத்துகளை சொல்வதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 7, 2025
₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <


