News December 7, 2025

உரிமைகளை கேட்போர் மதவாதிகளா? தமிழிசை

image

மத்தியில் திமுகவினர் அமைச்சராக இருந்தபோது ஏன் மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி சிந்திக்கவில்லை என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இஃப்தார் விருந்து, கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், எத்தனை குடமுழுக்குகளில் கலந்து கொண்டீர்கள் என்றும் காட்டமாக கேட்டுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உரிமையை தட்டி கேட்பவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.

Similar News

News March 9, 2026

அஜித்குமார் மரண வழக்கு: அதிர்ச்சியூட்டும் தகவல்

image

சிவகங்கை, காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு காரணமான நகை திருட்டு புகாரில் சம்பந்தப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என மதுரை கோர்ட்டில் CBI தெரிவித்துள்ளது. அதனை ஏற்று வழக்கை முடித்து வைக்க நிகிதா சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நகை திருட்டு வழக்கின் விசாரணைக்கு தனிப்​படை காவலர்​களால் அழைத்துச் செல்​லப்​பட்டு தாக்கப்பட்​ட​தில் கடந்த ஜூன் மாதம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2026

வெயிலை சமாளிக்க சில ‘கூல்’ டிப்ஸ்

image

சம்மரில் இந்த முறை வெயில் பயங்கர உக்கிரமாக இருக்குமாம். அதனால், வயதானவர்கள், குழந்தைகள் பகல் நேரங்களில் வெளியே வராமல் இருப்பது நல்லது. ஹீட் ஸ்ட்ரோக் தாக்காமல் தவிர்க்க உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். இதற்கு இளநீர், நன்னாரி, எலுமிச்சை சாறு, கூழ், மோர், பழைய சோறு என இயற்கையான ஜூஸ், திரவ உணவுகளை நிறைய உட்கொண்டாலே போதும். கோடை காலத்தை குளு, குளுவென ஓட்டிவிடலாம். SHARE.

News March 9, 2026

ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை

image

அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் டெஹ்ரான் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்று சவுதி அரேபியா ஈரானை எச்சரித்துள்ளது. மேலும், ஈரானின் தாக்குதல்கள் இருதரப்பு இடையே உள்ள தற்போதைய மற்றும் எதிர்கால உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் வளைகுடா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!