News April 15, 2024
உரம் கலந்த கண்ணீரை குடித்த 13 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.
Similar News
News November 14, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் 13 ஆயிரத்து 263 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
கள்ளக்குறிச்சி: இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
களக்குறிச்சி: பட்டாவில் பெயர் மாற்றமா..?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


