News February 13, 2026
உப்பு குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்!

குழந்தைகளின் உணவில் கூடுதலாக உப்பு சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து சோடியத்தையும் கொண்டுள்ளது. அதனால் உப்பு சேர்க்க தேவையில்லை. ஒரு வயத்துக்குட்பட்ட குழந்தைகளின் சிறுநீரகங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால், உப்பை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், 5 வயது வரை உப்பு கட்டாயம் இல்லை.
Similar News
News February 19, 2026
BREAKING: பெண்களுக்கு ₹2000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

இனி ஆண்டுதோறும் மகளிருக்கு கோடைகால சிறப்பு நிதியாக ₹2000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் சற்றுமுன் அறிவித்துள்ளார். கோடை காலம் வரவுள்ளதால், வெயில் தாக்கத்தால் மக்களுக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்த கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
News February 19, 2026
இலவச திட்டங்கள்… தமிழக அரசை விளாசிய SC

இலவசத் திட்டங்களை விட வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என SC அறிவுறுத்தியுள்ளது. வருமானம், வசதி அடிப்படையில் அல்லாமல் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் TN அரசின் நடவடிக்கைக்கு SC அதிருப்தி தெரிவித்துள்ளது. காலை இலவச உணவு, இலவச மின்சாரம் என்றால், மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்; தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலம் தொடரும் எனவும் விமர்சித்துள்ளது.
News February 19, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.


