News December 28, 2025

இந்தியாவிற்காக விளையாடிய பாக். வீரருக்கு நேர்ந்த கதி!

image

பஹ்ரைனில் நடந்த தனியார் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய பாக். கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை அந்நாட்டு கபடி கூட்டமைப்பு காலவரையின்றி தடை செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ராஜ்புத், தான் விளையாடப் போவது இந்திய அணி என்பது தனக்கு தெரியாது. இதற்கு முன்பு தனியார் போட்டிகளில், இருநாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாடியுள்ளனர், ஆனால் ஒருபோதும் நாட்டின் பெயர்களில் விளையாடியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்வு

image

தங்கம் விலை மிகப்பெரிய மாற்றத்துடன் இந்த வார வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்று(ஜன.5) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹12,680-க்கும், சவரன் ₹640 அதிகரித்து ₹1,01,440-க்கும் விற்பனையாகிறது. புத்தாண்டு நாளில் சரிவைக் கண்ட தங்கம் அதன்பிறகு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News January 5, 2026

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த பொருள்களை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு பயன்படுத்துவோம். ஆனால், சில பொருள்களை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அது என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

மாநாட்டுக்கு பிறகு தான் கூட்டணி: கிருஷ்ணசாமி

image

புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் தான் தங்கள் கட்சி எதை நோக்கி பயணிக்கும் என்பதன் விடை தெரியும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில் அக்கட்சியின் மாநில மாநாடு ஜன.7-ம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டுக்கு வேறு கட்சிகளை அழைக்கவில்லை என்றும், மாநாட்டுக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்றும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

error: Content is protected !!