News January 7, 2026
அமித் ஷாவா? அவதூறு ஷாவா? CM ஸ்டாலின் விளாசல்

தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித் ஷாவுக்கு CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் அரசு விழாவில் பேசிய அவர், TN-ல் கடந்த 4 ஆண்டுகளில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதை பாஜக ஆளும் மாநிலங்களில் கூட செய்திருக்க மாட்டார்கள் என்றார். மேலும் இப்படி பொய் குற்றச்சாட்டை வைத்தவர் அமித் ஷாவா, அவதூறு ஷாவா என கேட்க தோன்றுவதாக CM பேசினார்.
Similar News
News January 26, 2026
காங்., முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் காலமானார்

1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.
News January 26, 2026
ஒரு வாரத்தில் NDA-வில் இணையும் புதிய கட்சி: நயினார்

தேமுதிகவும் ராமதாஸ் அணியும் எந்த கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது. திமுக, அதிமுக என இரு கூட்டணிகளுமே தேமுதிக மற்றும் ராமதாஸுடன் பேசி வருவதாக தகவல் வருகிறது. இந்நிலையில், இன்னும் ஒருவாரத்தில் புதிய கட்சி ஒன்று NDA-வில் இணையும் என நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
R DAY அணிவகுப்பு.. தமிழ்நாடு ஊர்திக்கு வாக்களிங்க!

குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் & அணிவகுப்பு குழுக்கள் பங்கேற்றன. இதில், எது பெஸ்ட் என்ற வாக்கெடுப்பு நடைபெற்று, ஒரு மாநிலத்தின் அலங்கார ஊர்தி & அணிவகுப்பு குழு தேர்ந்தெடுக்கப்படும். இதில், தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு வாக்களிக்க, <


