News November 8, 2025

அனைவருக்கும் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம்

image

25 வயதுக்கு மேற்பட்டவர்களும் கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. முன்னதாக 18-25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே கூகுள் ஜெமினி ஏஐ PRO பிளான் இலவசம் என்று அறிவித்திருந்தது. 5ஜி பிளான் வைத்திருப்பவர்கள் My Jio செயலி பயன்படுத்தி இதை கிளெய்ம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ₹35,100 மதிப்பிலான திட்டங்களை 18 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

Similar News

News November 8, 2025

அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனர்: OPS

image

அதிமுக ஒன்றுபட வேண்டுமென 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர் என OPS கவலை தெரிவித்துள்ளார். சொந்த விருப்பு, வெறுப்புக்காக கட்சி ஒன்றுபடுவதை ஒருவர் தடுக்கிறார் என்றும், அதிமுக ஒன்றுபட வேண்டுமென PM மோடி, அமித்ஷா நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதியை மாற்றியவர் தான் EPS என்று OPS சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் சேர எந்த பதவியையும் கேட்கவில்லை என்று பேசியுள்ளார்.

News November 8, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சரிந்து வந்த தங்கம், வாரத்தின் இறுதி வர்த்தகத்தில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது $17 உயர்ந்து $4,001 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. சீன மத்திய வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிப்பதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

News November 8, 2025

அன்புமணியை கைது செய்ய வேண்டும்: MLA அருள்

image

தன்னை ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களின் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட பாமக MLA அருள், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அன்புமணி தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியே அன்புமணி என்பதால், அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!