News May 2, 2024
RBI-க்குச் சொந்தமான ₹2,000 கோடி சிக்கியது

ஆந்திராவில் ₹2,000 கோடி கைப்பற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 13ஆம் தேதி அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஜராம்பள்ளியில் 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்தப் பணம் RBI-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
Similar News
News March 11, 2026
BIG NEWS: பெட்ரோலுக்கும் தட்டுப்பாடா.. அடுத்தடுத்து ஷாக்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் பெட்ரோல் கையிருப்பு இம்மாதம்(மார்ச்) வரை மட்டுமே இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பெட்ரோல் தட்டுப்பாடு தற்போதுவரை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அச்சம் காரணமாகவே பலரும் பெட்ரோலை கேன்களில் வாங்கி கையிருப்பு வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை எப்போது முடியுமோ?
News March 11, 2026
செல்போன் Radiation அதிகரித்தால்..

செல்போன் கதிர்வீச்சுக்கள் உடல் செல்களை வெப்பமாக்குமாம். அதிகப்படியான கதிர்வீச்சினால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஹார்மோன் மாற்றத்தினால், மன அழுத்தம், பதற்றம் & தூக்கமின்மை பிரச்னைகளும் ஏற்படுமாம். SAR வழிகாட்டுதலின்படி, செல்போன் கதிர்வீச்சு ஒரு கிலோகிராம் திசுவுக்கு 1.6 வாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. உங்க போனின் Radiation-ஐ அறிய, ‘*#07#’ டயல் பண்ணுங்க.
News March 11, 2026
இரவில் தூங்குவதற்கு எந்தப் பக்கம் சிறந்தது?

இரவு தூங்கும் போது, எந்த பக்கம் படுத்தால் நல்லது என்ற கேள்வி பலருக்கும் உண்டு *இடது பக்கமாக படுத்தால், உணவு நிரம்பிய இரைப்பையானது கல்லீரலை அழுத்தாது. இதனால், செரிமானம் சிறப்பாக ஊக்குவிக்கப்படும். அதே போல, ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *வலது பக்கமாக படுக்கும்போது சுவாசக் குழாய் அழுத்தப்படும். மேலும், குறட்டை வருமாம். நீங்க எந்த பக்கம் படுக்குறீங்க?


