News April 16, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

image

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

Similar News

News January 28, 2026

இஸ்லாமியர்களை நிறைய குத்தி கிழித்துவிட்டோம்: தமிழ்

image

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசாவிட்டாலும், எதிராக பேசி விடாதீர்கள். அது இன்றைய சூழலில் மிகப்பெரிய ஆபத்தாகிவிடும் என இயக்குநர் தமிழ் பேசியுள்ளார். மேலும் 70 வருட சினிமாவில் இஸ்லாமியர்களை கார்னர் செய்து பல படங்கள் எடுத்து அம்மக்களை நிறைய குத்தி கிழித்துவிட்டோம் என்றும், சுதந்திர காலகட்டம் தொடங்கி சமகாலம் வரை எல்லா போராட்டத்திலும் நம்முடன் அவர்கள் நின்று போராடினர் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 594 ▶குறள்: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. ▶பொருள்: உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

News January 28, 2026

மாவட்ட செயலாளரை நீக்கிய OPS

image

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தில் இருந்து திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் TT காமராஜை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் OPS நீக்கி உத்தரவிட்டுள்ளார். கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் நீக்கியதாக கூறியுள்ள OPS, காமராஜுக்கு பதிலாக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக மாரிமுத்துவை நியமித்துள்ளார்.

error: Content is protected !!