News December 4, 2024
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு கூட்டம் இன்று (டிசம்பர் 4) நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதிவாணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் வழங்கி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இன்று நடந்த முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News January 3, 2026
வேலூர்: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி!

வேலூர்: தாராபடவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (60). மெக்கானிக்கான இவர், பள்ளிக்குப்பம் – காட்பாடி சாலையில், நேற்று தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அதேசமயம், காட்பாடியை சோ்ந்த திவாகா், தனது பைக்கில் பள்ளிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ரவி, படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
வேலூர்: திடீரெனப் பற்றி எரிந்த லாரியால் பரபரப்பு!

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் லாரிகள் பழுதுப் பார்க்கும் ஓர்க் ஷாப் உள்ளது. அங்கு, நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென லாரி முழுவதும் பரவி எரிந்தது. அதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 3, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


