News November 23, 2024
விவசாய நிலத்தில் முதலை: உயிருடன் மீட்ட வனத்துறை

காட்டாங்கொளத்துார், கீரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தின் அருகில் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில், 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று ஏரியில் இருந்து ஊர்ந்து ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவசாய நிலத்திற்குள் சென்றுள்ளது. தகவலறிந்து வந்த தாம்பரம் வனத்துறை அதிகாரிகள், முதலையை உயிருடன் பிடித்து வண்டலூரில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 19, 2025
செங்கல்பட்டு: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News October 19, 2025
செங்கல்பட்டு மக்களே நாளை இதை மறவாதீர்!

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 19, 2025
செங்கல்பட்டு: நாலாபுறமும் சிதறியோடிய லாரி டயர்கள்!

சேலத்தில் இருந்து சென்னைக்கு, வீடு கட்டுமானத்திற்கு தேவையான மரப்பலகைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வாலாஜாபாத் – வண்டலுார் சாலை, படப்பை புது மேம்பாலத்தின் துவக்க பகுதியில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, லாரி கவிழ்ந்தது. இதில், லாரி பலத்த சேதமடைந்தது டயர்கள் சிதறியோடின. காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதியினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.