News November 24, 2024
விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறை தீர் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில்(நவ.26) செவ்வாய் அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் நிலம் எடுப்பு, நில ஆக்கிரமிப்பு, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, பட்டா ரத்து, இலவச மனை பட்டா, நிலச் சீர்திருத்தம் தொடர்பான கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
*பகிரவும்*
Similar News
News December 15, 2025
விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் வரும் டிசம்பர் 19ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம் மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
விருதுநகரில் கத்தியால் குத்தியவருக்கு மாவுகட்டு

விருதுநகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கார்த்திக்குமார் 42 என்பவரை அல்லம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன், மணிகண்டன் மற்றும் மற்றொரு நபர் கத்தியால் குத்தி நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் செல்வத்தை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் மாலை தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்யும் போது சுவரில் ஏறி தப்பியோட முயன்று கீழே விழுந்து கை, கால் முறிந்ததால் விருதுநகர் GH-ல் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
News December 15, 2025
விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04562-252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


