News April 16, 2024
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்கு சேகரிப்பு

மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியை கையில் ஏந்தி எப்படி வாக்கு சேகரித்த அவர் தனக்கு வாக்களிப்பவர்கள் எந்த எண்ணில் உள்ள சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வாக்கு சேகரித்தார்.
Similar News
News December 13, 2025
மதுரை: ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி

சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு இடையே சமயநல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு நேற்று இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News December 13, 2025
மதுரை மக்களுக்கு புதிய APP அறிமுகம்

மதுரை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் புகார்களை பதிவிடும் “ஸ்மார்ட் மதுரை” செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்க பகுதியில் உள்ள குடிநீர், தெரு விளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, சாலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் இதன் மூலம் இனிமேல் எளிதாகப் புகாரளிக்கலாம். உடனடி தீர்வும் வழங்கப்ப்டும். இங்கு <
News December 13, 2025
மதுரை: போலி ஆவண தயாரிப்பில் குற்றவாளியாக அறிவிப்பு

மதுரை திருப்பாலையை சேர்ந்த சண்முகநாதனுக்கு சொந்தமான காலிமனையை போலி ஆவணம் தயாரித்து, வாடிப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய நிலையில் தலைமறைவானார். மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவரை
தேடப்படும் குற்றவாளியாக இன்று அறிவித்தது.


