News April 18, 2025
வடசேரியில் அரசு பேருந்தில் ஆண் பிணம்

நெல்லையிலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் வரசேரிக்கு வந்த அரசு பேருந்தில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னர் 50 வயதான ஆண் மட்டும் இருக்கையில் சாய்ந்தபடி இருந்துள்ளார். தூக்கிய நிலையில் இருப்பதாக நினைத்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
நாகர்கோவில் – கோவை ரயில் மற்றும் பாதையில் இயக்கம்

நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் ரயில் அடுத்த மாதம் 1, 6 ,8 , 11 , 13 ,15 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படும். மேலும் 1, 6, 8, 11, 13, 15ஆ கிய தேதிகளில் கோவையில் இருந்து நாகர்கோவில் வரும் ரயிலும் கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 30, 2025
குமரி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News October 30, 2025
குமரி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

குமரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில்<


