News April 19, 2025
லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.
Similar News
News December 10, 2025
மதுரை – கோவா சுற்றுலா ரயில் அறிவிப்பு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை முதல் கோவா சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து டிசம்பர் 27ம் தேதி புறப்பட்டு திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கோவா செல்கிறது. முன்பதிவு செய்ய விரும்புவார்கள் இணையதளத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு 73058 58585 மற்றும்<
News December 10, 2025
மதுரை: போட்டித் தேர்வர்களுக்கு இனிப்பான செய்தி.!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <
News December 10, 2025
JUST IN: திருப்பரங்குன்றம் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் பெரிய ரத வீதியிலுள்ள தர்காவிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.


