News August 7, 2024
ராமநாதபுரத்தில் தலைமை மருத்துவர் பணியிடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இருந்ததால் கோபமடைந்த அமைச்சர் ஜெயலலிதா தான் உங்கள் முதலமைச்சரா என கேள்வி எழுப்பி, தலைமை மருத்துவர் முத்தரசனை பணியிடமாற்றத்துக்கு உத்தரவிட்டார்.
Similar News
News January 7, 2026
இராமநாதபுரம்: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
News January 7, 2026
ராம்நாடு: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY..!

ராமநாதபுரம் மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News January 7, 2026
ராம்நாடு: ஓடும் பஸ்ஸில் நகை திருடிய பெண்கள்

கமுதிக்கு சென்ற தனியார் பஸ்ஸில் வழிமறிச்சான் கிராமத்தில் அன்னமயில் (55) என்ற பெண் ஏறினார். பஸ்சில் பயணம் செய்த இராமநாதபுரம் குயவன்குடியைச் சேர்ந்த ஈஸ்வரி (35), செல்வி (38) செய்யாமங்கலம் அருகே பஸ் வந்தபோது அன்னமயில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை திருடிவிட்டு விரதக்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.தகவலறிந்த முதுகுளத்தூர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


