News March 25, 2025
மதுரை மக்களே கட்டாயம்! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் எனவும் , கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.உங்கள் தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
Similar News
News November 22, 2025
மதுரை: பாலத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.!

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பிரேம்குமார்(29). இவர் கல்யாணிபட்டி பாலத்தில் அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதையில் தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
மதுரை: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
மதுரை: சிறுமி தற்கொலை முயற்சி… இளைஞருக்கு வலை

அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி பச்சையப்பன் மகன் சங்கிலிக்கருப்பு 24. இவர் அப்பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை தந்து வந்துள்ளார். ஏற்க மறுத்த சிறுமியின் வீட்டு கதவு மீது கற்களை எறிந்து மிரட்டினார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை காப்பாற்றிய பெற்றோர் சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து வாலிபர் தலைமறைவானார். போலீசார் தேடுகின்றனர்.


