News August 16, 2024
மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே 31.12.2024 க்குள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News November 22, 2025
மதுரை: ஓட ஓட விரட்டி கொன்ற இருவர் கைது!

மதுரையில் முத்துமணி போஸ் என்பவர் பைக்கில் சென்றபோது, அவரை கீழே தள்ளி தலையில் கல்லைப்போட்டு <<18327802>>கொலை <<>>செய்ததாகக் கூறி, ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த சரவணக்குமார்(19) மற்றும் கார்த்திகேயன்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டு பகுதியில் ஜூலை 11ம் தேதி சிவமணியை கொலை செய்த வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்டதால், பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
News November 22, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..கவலைய விடுங்க..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News November 22, 2025
மதுரை: பாலத்திலிருந்து கீழே விழுந்தவர் பலி.!

உசிலம்பட்டி அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பிரேம்குமார்(29). இவர் கல்யாணிபட்டி பாலத்தில் அமர்ந்து நேற்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது போதையில் தடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


