News February 17, 2025

புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர்

image

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அலுவலகத்தினை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 20 கிராமங்களும்,மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 4 கிராமங்களும், பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 2 கிராமங்களும் 26 கிராமங்கள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 14, 2025

சங்ககிரி அருகே மினி லாரி விபத்து: 4 பேர் காயம்!

image

சங்ககிரியை அடுத்த ஆணைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (38). இவர் பிரபு, கருணாகரன், குமார் ஆகியோருடன் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று திருப்பூர் நோக்கிச் சென்றார். சங்ககிரி கலியனூர் பைபாஸ் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 14, 2025

சேலம்: சாா்லப்பள்ளி – மங்களூரு இடையேசிறப்பு ரயில்!

image

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து மங்களூரு ஜங்ஷன் சிறப்பு ரெயில் (07267) வருகிற 24-ந் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள்
8.23 சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 26-ந் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷன் சென்றடையும். இதே போல் மறு மார்க்கத்தில் 30-ந் தேதி காலை 9.55 மணிக்கு புறப்படும்.

News December 14, 2025

சேலத்தில் நாளை 8 மணி நேரம் மின்தடை!

image

சேலத்தில் மின் பராமரிப்பு நடைபெறுகின்றது. இதன் காரணமாக நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு,தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி,கொண்டலாம்பட்டி,நெய்க்காரப்பட்டி,உத்தமசோழபுரம்,பூலாவரி,கரட்டூர், சூரமங்கலம்,மெய்யனுார், சின்னேரிவயல்,பள்ளப்பட்டி,சாமிநாதபுரம் பகுதிகளில் நாளை(டிச.15) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

error: Content is protected !!