News August 8, 2024
நியாயவிலைக்கடை தொடர்பான குறைதீர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், ஆகஸ்ட் 2024-ஆம் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை வரும் 10-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குடும்ப அட்டைகள், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள், முன்னிலையில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
புதுகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News January 8, 2026
புதுக்கோட்டை கலெக்டர் தகவல்!

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 30 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம்முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 43,519 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
புதுகை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


