News October 23, 2024
நாகை எஸ்.பி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் தொடர்பாக 9 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சரக போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Similar News
News December 17, 2025
நாகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது<
News December 17, 2025
நாகை: சாராயம் கடத்தியவர் அதிரடி கைது

நாகூர் – கொட்டாரகுடி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கொட்டாரகுடி பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த நபரின் பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பெரிய கண்ணமங்களத்தை ராஜா (52) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
News December 17, 2025
நாகை: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

வேதாரண்யம் நாலுவேதபதியை சேர்ந்தவர் மனோஜ் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (17) ஆகியோர் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேல வாஞ்சூர் ரவுண்டானா அருகே அரசு பஸ் ஒன்று மனோஜ் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மனோஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தினேஷ் படுகாயமடைந்தார். இதையடுத்து நாகூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் சண்முகம் (57) என்பரை கைது செய்தனர்.


