News October 24, 2024
தீபாவளி-க்கு சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, அக்.26-ம் தேதி எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்திற்கும் (07313), மறுமார்க்கத்தில், அக்.27-ம் தேதி கொல்லத்தில் இருந்து எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளிக்கும் (07314) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 23, 2025
BREAKING: சேலம் அருகே பயங்கர விபத்து

சேலம், உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே எதிர்பாராத விதமாக அந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணிக்கம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News December 23, 2025
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை (டிச.24) முதல் 29-ந் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது.
News December 23, 2025
சேலத்தில் கர்ப்பிணி தற்கொலை

சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஹேமதர்ஷினி(26). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமான நிலையில் இருக்கும் ஹேமதர்ஷினிக்கும் அவரது கணவர் சீனிவாசனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஹேமதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


