News April 13, 2025
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் அம்மனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். அம்மனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News December 2, 2025
திருச்சி: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரும், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது நர்சிங் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் ஹரிஷை தேடி வருகின்றனர்.
News December 2, 2025
திருச்சி: அதிரடி காட்டிய போலீசார்

போலியான இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி கே.கே நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.48 லட்சம் ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை மீட்டு, மாநகர காவல் ஆணையர் காமினி பாதிக்கப்பட்டவரிடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தார்.
News December 2, 2025
திருச்சி: 1368 கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்

திருச்சி மாநகராட்சியில் ஜனவரி 2023 முதல் தற்போது வரை சாலையில் சுற்றித் திரிந்த 1,368 மாடுகளை பிடித்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


