News April 21, 2025

 டாட்டா ஏசி நேருக்கு நேர் மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற டாட்டா ஏசி சரக்கு வாகனமும், எதிரே வந்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News

News December 15, 2025

கள்ளக்குறிச்சியில் பயங்கர சாலை விபத்து!

image

உளுந்தூர்பேட்டை அருகே தக்கா பகுதியில் நேற்று(டிச.14) இரவு 9:30 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில், மூவர் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு ஆட்டோ மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.14) இரவு முதல் நாளை (டிச.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!