News April 14, 2025
சிவகாசி மேயரின் மகனுக்கு கட்சியில் பொறுப்பு

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி பகுதி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பட்டியல் இன்று (பிப்.14) வெளியாகியது. இதில் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாவின் மகன் பிர்லா இன்பம் சிவகாசி மாநகர திமுக இளைஞர் அணி 5ஆம் பகுதி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்வான பிர்லா இன்பம் நிதி அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசுவிடம் வாழ்த்து பெற்றார்.
Similar News
News January 9, 2026
விருதுநகர்: தேர்வு இல்லாமல் ARMY வேலை.. உடனே APPLY..

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் <
News January 9, 2026
விருதுநகர்: வீட்டை உடைத்து லட்ச கணக்கில் நகை திருட்டு.!

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால்(41). இந்நிலையில் ஜெயபால் கடந்த 7 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று ஜன.8 மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே லாக்கரிலிருந்து 14.1/2 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 9, 2026
விருதுநகர்: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க.


