News August 17, 2024
சிவகாசி அருகே முதியவர் வெட்டி கொலை

சிவகாசி அருகே எரிச்சநத்தம் -அழகாபுரி சாலையில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவன இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருபவர் குமிழங்குளத்தை சேர்ந்த சௌந்தரராஜன்(84). இன்று அதிகாலை மர்ம நபர்கள் இவரை வெட்டி கொலை செய்து அவர் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இக்கொடூர சம்பவம் குறித்து, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News September 18, 2025
விருதுநகர்: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <
News September 18, 2025
விருதுநகர்: கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா. இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த 2023ம் ஆண்டு மனைவி வீட்டில் கற்பகராஜா உயிரிலிருந்து கிடந்தார். இது குறித்த விசாரணையில் ராஜலட்சுமி உள்பட 4 பேர் கற்பகராஜாவை கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் நேற்று ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபது தீர்ப்பளித்தார். மேலும் மூன்று பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
News September 18, 2025
விருதுநகர் மக்களே., இதை மிஸ் பண்ணிடாதீங்க!

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (சூலக்கரை மேடு, அரசு ITI அருகில்) நாளை (19.9.2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 10ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேலைதேடும் நண்பர்களுக்கு உடனே இதனை SHARE பண்ணுங்க.