News April 2, 2025
சதுரகிரி அனுமதி குறித்து ஆலோசிக்க வனத்துறைத் திட்டம்

சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரிக்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை அமல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை யோசித்து வருகிறது.
Similar News
News October 18, 2025
விருதுநகர்: ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்!

திருச்சுழி உடையனேந்தலை சேர்ந்தவர் மதிதயன். காரில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று கல்குறிச்சியில் விற்பனை செய்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உடையனேந்தல் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. கார் தீயில் கடும் சேதமடைந்தது.
News October 17, 2025
விருதுநகரில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகரில் அக். 20ம் தேதி தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 17, 2025
விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <