News August 2, 2024
குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Similar News
News December 18, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 18, 2025
குமரி: வக்கீல் உட்பட 2 பேரிடம் ரூ 9.83 லட்சம் மோசடி

தக்கலை குற்றக்கரை வக்கீல் சிவகாந்த் (29), அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோரிடம் குருவிக்காட்டுவிளை சஜின் ஜோஸ் ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2024ம் ஆண்டு ரூ.9.83 லட்சத்தை வங்கிக் கணக்கு மூலம் பெற்றுள்ளார். வேலை பெற்றுக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் சஜின் ஜோஸ் ஏமாற்றி மோசடி செய்ததாகக்கூறி தக்கலை போலீசில் சிவகாந்த் நேற்று அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
News December 18, 2025
குமரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க


