News August 25, 2024
குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் வெட்டிக் கொலை

பனங்கால முக்கு பகுதியை சேர்ந்த சூர்யா, அவரது தம்பி ஆனந்த் ஆகிய இருவரும் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். மதுபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் நேற்று சூர்யாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சூர்யா குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் அவரை கொலை செய்ததாக ஆனந்த் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
Similar News
News December 9, 2025
நாகர்கோவில் ரயிலில் பெண் திடீர் பலி

நேற்று (டிச.8) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே, வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெபியோலா (63) என தெரிந்துள்ளது.
News December 9, 2025
நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நுள்ளிவிளை பகுதியில் அமைந்துள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அங்கு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இதனை ஒட்டி திங்கள் சந்தை – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News December 9, 2025
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு நடைபெற உள்ளது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சித் தலைவருமான அழகு மீனா கலந்தாய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


