News January 1, 2025

காவல்துறை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்

image

அரவக்குறிச்சி தாராபுரம் பள்ளபட்டி சாலையில் அரவக்குறிச்சி காவல்துறையினர் கேக் வெட்டி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் ஒரு சிலரும் உடனிருந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் கேக்குகளை முகத்தில் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Similar News

News October 17, 2025

கரூர்: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா வெண்ணமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (27). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று தனது பைக்கில் செம்மடை சாலையில் சென்ற போது எதிரே விஜயகுமார் ஓட்டி வந்த மேக்சிகேப் வேன் மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து அவரின் தந்தை ராமசாமி அளித்த புகாரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News October 17, 2025

கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் கவலைக்கிடம்!

image

கரூர் இரும்பூதிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே மாணிக்க சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாணிக்க சுந்தரம் வாகனத்தின் மீது பின்னால் மோதியதில், தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News October 17, 2025

கரூர்: அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

image

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!