News January 23, 2025
காட்பாடி ரயிலில் வந்த 1209 டன் யூரியா மூட்டைகள்

மங்களூருவில் இருந்து 1209 டன் யூரியா, 127 டன் பொட்டாசியம் ஆகியவை இன்று (ஜனவரி 23) காட்பாடிக்கு ரயிலில் வந்தது. இவற்றை தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூருக்கு 750 டன் யூரியா, ராணிப்பேட்டைக்கு 100 டன், திருப்பத்தூருக்கு 75 டன் யூரியா, காஞ்சிபுரத்திற்கு 100 டன் யூரியா, செங்கல்பட்டிற்கு 25 டன் யூரியா, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 200 டன் யூரியா பிரித்து அனுப்பப்பட்டது.
Similar News
News September 15, 2025
பள்ளி மாணவிகளுக்கு ரூ.75,000/-க்கான வைப்புத்தொகை

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.75,000/-க்கான வைப்புத்தொகை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று வழங்கினார்.
News September 15, 2025
வேலூர்: டிகிரி போதும் – ரயில்வே வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: பட்டப்படிப்பு
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 15, 2025
வேலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வரும் செப்.16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT