News November 18, 2024
கடனா அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று(நவ.,17) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் 15 மில்லி மீட்டர் மழை மற்றும் ராம நதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாக இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 14, 2026
தென்காசி: மதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் பணம் பறிமுதல்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் குருவிகுளத்தை சேர்ந்த மதிமுக ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் பணம் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் நேற்று சிவகிரி தேர்தல் தாசில்தார் ரவி கணேஷிடம் ஒப்படைத்தனர்.
News April 14, 2026
தென்காசி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – கலெக்டர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களாக ஆசிரியர் பெருமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் நாளை (ஏப் 15) தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு.