News May 7, 2025
எப்படி இருக்கிறது ரெட்ரோ..?

‘ரெட்ரோ’ படத்தின் முதல் காட்சிகளை வெளிமாநிலங்களில் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் பயங்கர ஸ்டைலாக இருப்பதாகவும், சூர்யா அசத்தலாக நடித்திருப்பதாகவும் சிலாகித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தை பாராட்டி, படம் நிச்சயம் ஒரு ‘Cult Classic’ தான் என குறிப்பிடுகின்றனர். மேலும், பூஜா ஹெக்டேவின் நடிப்பையும் வெகுவாக பாராட்டுகின்றனர். நீங்க எப்போ படம் பாக்க போறீங்க?
Similar News
News January 7, 2026
NDA-வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? அன்புமணி விளக்கம்

மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காகவே அதிமுகவுடன் கைகோர்த்துள்ளதாக அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். 100 நாள்களாக சுற்றுப்பயணம் செய்து பாமக தொண்டர்களிடம் கருத்து கேட்டு இந்த கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக கூறிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறும் என சூளுரைத்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News January 7, 2026
பொங்கல் பரிசுத் தொகுப்பு.. அரசு புதிதாக அறிவித்தது

பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் நாளை முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் <
News January 7, 2026
மிகவும் கவலையாக உள்ளது: ஜெய்சங்கர்

<<18775826>>அதிபர் மதுரோ<<>> கைதுக்கு பின்னர், வெனிசுலாவில் நிலவி வரும் சூழல் கவலையை ஏற்படுத்துவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அங்கு நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து பேசி, வெனிசுலா மக்களின் நலனிற்காக சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


