News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 27, 2025

தி.மலையில் பயங்கர தீ விபத்து!

image

திருவண்ணாமலை: காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள கற்பூர கடையில் நேற்று(நவ.26) இரவு 10.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த கடைகள் மற்றும் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

News November 27, 2025

தி.மலை: பெண்ணின் சேலையில் பற்றி எரிந்த தீ!

image

அண்ணாமலையார் கோயிலுக்கு வெளியே கற்பூரம் ஏற்றும் இடத்தில் நேற்று(நவ.26) பெண் ஒருவரின் சேலையில் திடீரென தீப்பற்றி சிறிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவர் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News November 27, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.26) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!