News February 16, 2025

அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் புதுப்பை அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் புதுப்பை அமராவதி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

திருப்பூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது!

image

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News September 16, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News September 16, 2025

திருப்பூர்: DRIVING தெரிந்திருந்தால்! அரசு வேலை

image

திருப்பூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE IT

error: Content is protected !!