News April 8, 2025

ஃபேன்சி நம்பருக்கு ₹45.99 லட்சம்!

image

வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். சில ஆயிரம் வரை கூட அதற்காக செலவு செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால், கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ₹45.99 லட்சம் செலவு செய்திருக்கிறார். KL 07 DG 0007 என்ற நம்பர் பிளேட் RTOவில் ஏலம் விடப்பட்டபோது, 5 போட்டியாளர்களை தோற்கடிக்க, இவ்வளவு தொகை கொடுத்திருக்கிறார். இந்தியாவிலேயே இது தான் அதிக விலைக்கு போன நம்பர் பிளேட்டாம்!

Similar News

News April 19, 2025

JEE முதல்நிலை 2-ம் கட்டத் தேர்வு முடிவு வெளியானது!

image

JEE 2-ம் கட்ட முதல்நிலை(மெயின்) தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.19) வெளியானது. IIT, NIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG பொறியியல் படிப்புகளில் சேர JEE முதல்நிலை, முதன்மை என 2 கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 – 9-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதிய நிலையில், அதன் முடிவுகள் <>https://jeemain.nta.nic.in/<<>> இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ALL THE BEST..

News April 19, 2025

தொடரும் RCB-யின் சோகம்!

image

நடப்பு IPL தொடரில், இதுவரை 7 மேட்ச்சில் விளையாடி இருக்கும் RCB, அதில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தோல்வியடைந்த 3 மேட்சும் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிதான். வெளி கிரவுண்டில் வெற்றி பெற்ற அணியால், பாவம்…. சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை!

News April 19, 2025

செல்வத்தைப் பெருக்கும் மகாவிஷ்ணு காயத்ரி மந்திரம்!

image

மகாவிஷ்ணுவுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க. வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மனநிம்மதி அடைந்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
‘ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்’

error: Content is protected !!