News February 25, 2025
₹3,252 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: அமைச்சர்

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ₹3,252 கோடி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பெரியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நிதி விடுவிப்பதைத் தாமதித்தால், திட்ட பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியாமல் போவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊதிய நிலுவை ₹2,400 கோடியாகவும், உட்கட்டமைப்பு நிலுவை ₹852 கோடியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
5 நிமிடத்தில் தங்க டாய்லெட்டை திருடிய கில்லாடிகள்

ஒரு டாய்லெட்டை திருடி, கொள்ளையர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள் என சொன்னால் நம்ப முடியுதா?. உண்மை தான்!, பிரிட்டனில் உள்ள Blenheim Palace-ல் 18 கேரட் தங்கத்தால் ஆன கழிப்பறையை (₹42.48 Cr), 2019ல் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வெறும் 5 நிமிடத்தில் 4 கொள்ளையர்கள் திருடியுள்ளனர். திருடர்களை போலீஸ் கைது செய்தபோதிலும், தங்க டாய்லட்டை தற்போதுவரை மீட்க முடியவில்லை என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 25, 2025
காவல் நிலையத்திலேயே கொடூரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல்லில் 2001ம் ஆண்டு நடந்த நகை திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றார். இவ்வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
News February 25, 2025
துபாயைச் சுற்றி வரும் இந்திய வீரர்கள்

2025 CT தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் BAN, PAK அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து, IND அடுத்து விளையாட உள்ள போட்டி, மார்ச் 2ல் தான் நடைபெற உள்ளது. இதனால், வீரர்களுக்கு 7 நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. இதையொட்டி, அவர்கள் துபாயை ஜாலியாக சுற்றி வருகின்றனர். அந்த வகையில், சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜாவும், குல்தீப் யாதவும் சுற்றி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.