News March 14, 2025

கிராமச் சாலைகளை மேம்படுத்த ₹2,200 கோடி

image

₹675 கோடி மதிப்பில் 102 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ₹400 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்படும். கிராமச் சாலைகளை மேம்பாட்டுக்காக ₹2,200 கோடியும், சென்னையில் சீராக குடிநீர் விநியோகித்திட சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ₹2,423 கோடியும் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2025

REWIND: இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான நாள்!

image

இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா, 1931ஆம் ஆண்டு இதேநாளில் (மார்ச் 14) வெளியானது. ஹிந்தியில் வெளியான இந்த படத்தை அர்தேஷிர் இரானி என்பவர் இயக்கி தயாரித்து வெளியிட்டார். பார்சி மொழி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஆலம் ஆரா படத்தின் நீளம் 124 நிமிடங்கள். ஆலம் ஆரா என்பதற்கு உலகத்தின் ஆபரணம் என்பது பொருள். நாட்டின் முதல் முழு நீளத் திரைப்படம் 1913-ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற மௌன படமாகும்.

News March 14, 2025

தமிழ்நாட்டை சீண்டிய பவன் கல்யாண்

image

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசியவர், ஏன் இத்தனை மொழிகளில் பேசுகிறேன் என கேட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்ல, தேசத்திற்கே பல மொழிகள் தேவை எனவும், அப்போதுதான் ஒரு மாநிலத்தவரை, பிற மாநிலத்தவர் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

News March 14, 2025

நாளை தேர்வு எழுத முடியாதா… சிபிஎஸ்இ மீண்டும் வாய்ப்பு

image

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.

error: Content is protected !!