News March 19, 2024

ஆர்டரை ரத்து செய்ததற்காக ₹10,000 அபராதம்!

image

ஃப்ளிப்கார்ட் தளத்தில் நுகர்வோர் ஒருவர் ₹39,000 கொடுத்து ஐபோனை ஆஃபரில் புக் செய்துள்ளார். ஆனால் கூடுதல் லாபத்திற்காக அந்த ஆர்டரை வேண்டுமென்றே ஃப்ளிப்கார்ட் ரத்து செய்து, பணத்தை திருப்பி கொடுத்துள்ளது. ஆனால், ஆர்டரை ரத்து செய்ததற்காக அந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். அதில், நுகர்வோர் அடைந்த மன உளைச்சலுக்காக ₹10,000 இழப்பீடு வழங்க ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 26, 2025

வெயில்: பகல் 11 to 3 வெளியே வர வேண்டாம்

image

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்

News April 26, 2025

மழையால் IPL போட்டி பாதிப்பு

image

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் PBKS vs KKR ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த PBKS அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்த களமிறங்கிய KKR அணி, ஒரு ஓவருக்கு விக்கெட்டுகள் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், மைதானம் முழுவதும் மூடப்பட்டது.

News April 26, 2025

தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

image

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

error: Content is protected !!