News March 14, 2025
நாளை வங்கிக் கணக்கில் ₹1,000

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, TN அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் இத்தொகை, நாளை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனிடையே, இன்றைய தமிழக பட்ஜெட்டில் மகளிர் உதவித்தொகை திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, ₹1,000ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News March 14, 2025
மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி காலமானார்

மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கிங் அங்கிள், காமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவ் முகர்ஜி. இவர், பிரமாஸ்திரா பட இயக்குநர் அயன் முகர்ஜியின் தந்தை. மேலும், ராணி முகர்ஜி, கஜோலின் உறவினர். அவரின் தந்தை சசாதார் முகர்ஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர். தாயார் சதிதேவி முகர்ஜி, புகழ்பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார், கிசோர் குமாரின் சகாேதரி ஆவார்.
News March 14, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிசன்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசின் ஏஜென்சிகள் அழைப்புகளை இடைமறிப்பதை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
News March 14, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்வு

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 1 கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்தது. பின்னர் மாலை ரூ.70 அதிகரித்தது. அதாவது, 1 கிராம் விலை இன்று ஒரே நாளில் ரூ.180 உயர்ந்தது. இதையடுத்து, 1 கிராம் தங்கம் ரூ.8,300ஆகவும், சவரன் ரூ.66,400ஆகவும் விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தாண்டியது, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.