News March 1, 2025
நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ₹1,000 அபராதம்

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ₹1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.
Similar News
News March 3, 2025
அண்ணாமலை பேச்சுக்கு எஸ்டிபிஐ எதிர்ப்பு

தமிழக மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுவதால் இலங்கை கடற்படை கைது செய்வதாக கூறிய அண்ணாமலைக்கு எஸ்டிபிஐ நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த நாட்டு குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு, அதை செய்யத்தவறியதோடு, அவர்கள் மீதே அவதூறு பரப்பி வருவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 3, 2025
பிலிப்ஸிடம் சண்டை போடும் கோலி ஃபேன்ஸ்… ஆனா…

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வெறி பிடித்தவர்கள் போல. நேற்று க்ளென் பிலிப்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்து கோலியை அவுட்டாக்கினார். உடனே சோஷியல் மீடியாவில் கோலி ரசிகர்கள் கம்பு சுத்த தொடங்கிவிட்டனர். பிலிப்ஸின் அக்கவுண்டில் சரமாரியாக கமெண்ட்டுகளை செய்கிறார்கள். ஆனால், அது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸின் சோஷியல் மீடியா பேஜ் என அவர்களுக்கு தெரியவில்லை. இதுக்கு தான் படிங்கடா’னு சொல்றது!
News March 3, 2025
2026 தேர்தல் அதிமுக கூட்டணி.. பாஜகவுக்கு மட்டும் ‘நோ’

2026 தேர்தலுக்கு தற்போதே கூட்டணி கணக்கை திமுக, அதிமுக வகுக்கத் தொடங்கியுள்ளன. திமுக தனது கூட்டணியைத் தக்க வைக்க முயற்சிக்கும் நிலையில், அதிமுக மெகா கூட்டணி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளை இழுக்கவும், விஜய் கட்சியை சேர்க்கவும் ஆர்வம் காட்டும் அதிமுக, பாஜகவை மட்டும் கூட்டணியில் சேர்க்கக் கூடாதென உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.