News February 9, 2025

கூட்டுறவு வங்கிகளில் ₹1 லட்சம் கோடி கடன் இலக்கு

image

கூட்டுறவு வங்கிகளில் நடப்பு நிதியாண்டில் அனைத்து பிரிவுகளிலும் ₹1 லட்சம் கோடி கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, நகைக்கடன், பயிர்க்கடன் என ₹85,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதியாண்டு முடிவடைய ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், இலக்கை அடைவது கடினமாகியுள்ளது. தொடர்ந்து, மகளிர் குழு, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்தி இலக்கை அடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2025

உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?

image

குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.

News February 10, 2025

கும்பமேளாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர்

image

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (பிப்.10) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. PM மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே நீராடி சென்றுள்ளனர். இதுவரை 35 கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

News February 10, 2025

உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’

image

மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!

error: Content is protected !!