News April 10, 2024
ஹேமமாலினி குறித்து அவதூறு; காங்., பிரமுகருக்கு நோட்டீஸ்

ஹேமமாலினி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த காங்., தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான பேச்சுகளில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக. இது குறித்து பேசிய ரந்தீப் சுர்ஜேவாலா, “நான் பேசியதை வெட்டி ஒட்டியுள்ளார்கள், அவதூறாக எதையும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
Similar News
News April 26, 2025
80 வயது மூதாட்டி ரேப், கொலை.. இளைஞர் கைது

சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த நாகராஜ் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறையில் தவறி விழுந்த அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
News April 25, 2025
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
ஆக்ஷன் விருந்துக்கு ரெடியா மக்களே?

‘மிஷன்: இம்பாசிபிள் 8’ படம் இந்தியாவில் வரும் மே 17-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் மே 23-ம் தேதி ரிலீசாகும் நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இங்கு ரிலீசாகிறது. 7-ம் பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி தான் இந்த பாகத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.