News March 27, 2025
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்தில் இளைஞர் பலி

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பைக்கில் மாடசாமி என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலையில் தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மாரியப்பன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சந்திரசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 4, 2025
ஆண்டாள், ரங்கமன்னார் நாச்சியார்பட்டிக்கு புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நேற்று (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளல் நடைபெறும். இரண்டாம் நாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நாச்சியார்பட்டிக்கு புறப்பட்டனர். ஏப்ரல் 11 ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
News April 4, 2025
விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) விருதுநகர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 4, 2025
விருதுநகரில் அக்காவை கொன்ற தம்பி கைது

விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி(45). இவருடைய தம்பி பெரியசாமி(42). கடந்த சில நாட்களுக்கு முன்பு இடப் பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெரியசாமி அக்கா திருமணியை வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பெரியசாமியை நேற்று கைது செய்தனர்.